மேலும் செய்திகள்
கடைகள் அரைநாள் விடுமுறை
03-Dec-2024
பல்லடம்: பல்லடம் ஒன்றியம், தெற்குப்பாளையத்தை சேர்ந்தவர் சந்தோஷ், 26. கூலி தொழிலாளி. நேற்று முன்தினம், இவரது வீட்டுக்கு அருகே, இருவர் திறந்தவெளியில் மது அருந்திக் கொண்டிருந்தனர். இதுகுறித்து சந்தோஷ், அவர்களிடம் கேட்டுள்ளார். மது போதையில் ஆத்திரம் அடைந்த இருவரும், அருகில் இருந்த தென்னை மட்டையால், சந்தோஷை தாக்கினர். காயமடைந்த சந்தோஷ், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பழனிசாமி அளித்த புகாரின் பேரில், திருச்சியை சேர்ந்த சந்தோஷ்குமார், 25; கரூரை சேர்ந்த ரிஷிகேஷ்வர், 25 ஆகிய இருவரையும், பல்லடம் போலீசார் கைது செய்தனர்.
03-Dec-2024