உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காட்சிப்பொருளாக தானியங்கி சிக்னல்; தளி ரோட்டில் விபத்து அபாயம்

காட்சிப்பொருளாக தானியங்கி சிக்னல்; தளி ரோட்டில் விபத்து அபாயம்

உடுமலை; உடுமலை - தளி ரோடு மேம்பாலம் வழியாக, நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. மூணாறு, மறையூர், அமராவதி அணை, திருமூர்த்திமலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கும் மேம்பாலம் வழியாகவே செல்ல வேண்டும்.உள்ளூர் மட்டுமல்லாது பிற மாநில வாகனங்களும் மேம்பாலம் வழியாக செல்வதால், தேவையான தகவல் பலகைகளை வைப்பது அவசியமாகும். பிற பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் மேம்பாலத்தில் அதிவேகமாக செல்வதை தடுக்க, முன்பு, தானியங்கி 'பிளிங்கிரிங்' சிக்னல் அமைக்கப்பட்டிருந்தது.இந்த சிக்னலில், இடைவெளி விட்டு, மஞ்சள் விளக்கு எரிந்ததால், மேம்பாலத்தில் செல்லும் வாகனங்கள் வேகம் குறைத்து பயணித்து வந்தன. இந்த சிக்னல் போதிய பராமரிப்பு இல்லாமல், முடங்கியுள்ளது.இதனால், அவ்வழியாக அனைத்து வாகனங்களும் அதிவேகமாக செல்கின்றன. பாலத்தில் இருந்து கீழே இறங்கும் வாகனங்களும் வேகமாக வருவதால், சந்திப்பில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. போக்குவரத்து போலீசார் தானியங்கி சிக்னலை சீரமைத்து, தேவையான தகவல் பலகையும் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை