சிவசக்தி பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருப்பூர்: திருப்பூர், திருநீலகண்டபுரத்தில் உள்ள சிவசக்தி நர்சரி அண்ட் பிரைமரி பள்ளியில் திடக்கழிவு மேலாண்மை குறித்து மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் ஜெயந்தி முன்னிலை வகித்தார். மாநகராட்சி இளம் பொறியாளர் சுரேஷ் மக்கும் குப்பைகளை பச்சை; மக்காத குப்பைகளை நீலம்; ஆபத்தான கழிவுகளை சிவப்பு நிறத்தொட்டியில் சேகரித்து துாய்மைப்பணியாளரிடம் வழங்க வேண்டும் என்று மாணவ, மாணவியருக்கு விளக்கினார். பள்ளி செயலாளர் ராமசாமி நன்றி கூறினார்.