உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிரேக் பிடிக்காத டவுன் பஸ்நுகர்வோர் அமைப்பு பகீர்

பிரேக் பிடிக்காத டவுன் பஸ்நுகர்வோர் அமைப்பு பகீர்

திருப்பூர்;திருமுருகன்பூண்டி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் காதர்பாஷா, திருப்பூர் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் அளித்த மனு:நம்பியூரில் இருந்து அவிநாசி வழியாக திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டுக்கு, டி.என்.,33 என்.2710 என்ற எண் கொண்ட '9இ' டவுன் பஸ் இயக்கப்படுகிறது. 4ம் தேதி காலை, 10:30 மணிக்கு இந்த பஸ், திருமுருகன்பூண்டி வி.ஜி.வி., பஸ் நிறுத்தத்தில் நின்ற போது, எங்கள் அமைப்பின் நிர்வாகிகள் இந்த பஸ்சில், டிக்கெட் வாங்கி பயணித்தோம்.அந்த பஸ் சரியாக பிரேக் பிடிக்காத நிலையிலேயே, டிரைவர் ஓட்டி செல்கிறார் என்ற பயணிகளின் புகார் அடிப்படையில் தான், அந்த பஸ்சின் நிலையை அறிய அதில் பயணித்தோம். பஸ் ஓட்டுனர், ஒவ்வொரு முறை 'பிரேக்' பிடித்து, வண்டியை நிறுத்தும் போதும், பெரும் அச்சுறுத்தலாகவே இருந்தது.இதனால், பஸ்சில் பயணிக்கும் பயணிகள் மட்டுமின்றி, சாலையில் செல்லும் பாதசாரிகள் மற்றும் பிற வாகன ஓட்டிகள் கூட அச்சத்தில் உறைந்தனர். இதுபோன்ற பழுதான பஸ்களை பழுதுநீக்கி இயக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ