இன்று அக் ஷய நவமி நதியில் நீராடுவது சிறப்பு
திருப்பூர் : 'அக் ஷய நவமி நாளான இன்று, ஜீவநதியில் நீராடி, இழந்த பதவிகளை பெறலாம்; பாவங்களை போக்கலாம்' என, தேசிய சிந்தனை பேரவை அழைப்பு விடுத்துள்ளது. தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,''கங்கை, காவிரி நதிகள், பூமிக்கு வந்த நாள், அக் ஷய நவமி; இன்று (10ம் தேதி), அக் ஷய நவமி தினம் என்பதால், புனித நதிகளில் நீராடுவது சிறப்பு.ஐப்பசி மாத காவிரி ஆற்றில், துலாகட்டமான மயிலாடுதுறையில் புனித நீராடல் செய்வது புண்ணியம். விசாகம் நட்சத்திரம், 2வது பாதத்தில், ஏதாவது ஒரு கிரகம் இருக்க பிறந்தவர்கள், அவசியம் நன்னீராடல் செய்ய வேண்டும். கங்கை, காவிரியில் நீராட இயலாதவர்கள், அருகே உள்ள ஜீவநதியில் நீராடி இழந்த பதவிகளை பெறலாம்; பாவங்களை போக்கலாம்,'' என்று தெரிவித்துள்ளார்.