மேலும் செய்திகள்
ஆர்ப்பாட்டம்
04-Nov-2025
திருப்பூர்: பா.ஜ., சார்பில், திருப்பூரில் கிருபானந்த வாரியாருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. உலகெங்கும் ஹிந்து சமய சொற்பொழிவாளர் கிருபானந்த வாரியார் பிரசித்தி பெற்றவர். அவரது 33வது ஆண்டு நினைவு நாளையொட்டி, திருப்பூரில், பா.ஜ. சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. காங்கயம் ரோடு, வேலன் ஓட்டல் எதிரில் நடந்த நிகழ்ச்சியில், கிருபானந்த வாரியார் படத்துக்கு மாலை அணிவித்தும், மலர் துாவியும் மரியாதை செலுத்தப்பட் டது. தேசிய பொதுக்குழு உறுப்பினர் பாயின்ட் மணி, மாவட்ட செயலாளர் கார்த்திக், ஓ.பி.சி. மாநில செயற்குழு உறுப்பினர் ஐயப்பன் உட்பட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்று வாரியாருக்கு அஞ்சலி செலுத்தினர்.
04-Nov-2025