உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பா.ஜ.,வினர் மூவர்ண கொடி யாத்திரை

பா.ஜ.,வினர் மூவர்ண கொடி யாத்திரை

திருப்பூர்; திருப்பூரில் பா.ஜ.,வினர் மூவர்ண கொடி ஊர்வலம் சென்றனர். திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், அனைவரும் வீடுகளில் தேசியக் கொடியேற்ற வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு, தெற்கு, பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மூவர்ண கொடி யாத்திரையை நேற்று மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக, செரங்காடு மண்டலம் சார்பில், காமாட்சி அம்மன் கோவில் மண்டபத்தில் இருந்து மாநகராட்சி காந்தி சிலை வரை ஊர்வலமாக சென்றனர். தேசியக்கொடி ஏந்தி அனைவரும் கதர் தொப்பி அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர். மண்டல தலைவர் மந்திராசல மூர்த்தி ஏற்பாட்டில், மாவட்ட பொது செயலாளர் அருண், துணை தலைவர் கவிதா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை