உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவர்களுக்கு புத்தகம்

மாணவர்களுக்கு புத்தகம்

அனுப்பர்பாளையம்; திருப்பூர், சர்வ சக்தி ஜன பேரவை சார்பில், சுரேஷ் சுவாமி பிறந்தநாள் விழா அண்ணா நகர், சுடலை மகாராஜா கோவில் வளாகத்தில் நடைபெற்றது.பேரவை மாவட்ட தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். செயலாளர் சதீஷ்பாபு முன்னிலை வகித்தார். பொருளாளர் ராஜசேகர் வரவேற்றார். சுரேஷ் சுவாமி பக்தர்களுக்கு இனிப்பு வழங்கினார்.பள்ளி மாணவ, மாணவியர், 500 பேருக்கு நோட்டு, புத்தகம் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.பக்தர்கள், சுரேஷ் சுவாமிக்கு சால்வை அணிவித்து, ஆசி பெற்றனர். மாவட்ட அமைப்பாளர் ஜனார்த்தனன், கவுரவ ஆலோசகர் தேவராஜ், மாவட்ட துணை தலைவர் கோபால்சாமி, துணை செயலாளர் வெங்கடாசலம் மற்றும் பக்தர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி