உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பா.ஜ., வெற்றி பெற செய்ய பூத் பொறுப்பாளர்கள் சபதம்

பா.ஜ., வெற்றி பெற செய்ய பூத் பொறுப்பாளர்கள் சபதம்

அவிநாசி';அவிநாசி சட்டசபை தொகுதி பா.ஜ., பூத் பொறுப்பாளர்கள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.நீலகிரி லோக்சபா தொகுதி பொறுப்பாளர் கதிர்வேலன் முன்னிலை வகித்தார். அவிநாசி மேற்கு ஒன்றிய தலைவர் கருணாநிதி வரவேற்றார். கோவை பெருங்கோட்ட பொறுப்பாளர் பாலகுமாரன் சிறப்புரை ஆற்றினார்.நீலகிரி தொகுதி பொறுப்பாளர் மாரிமுத்து, அவிநாசி தொகுதி இணை அமைப்பாளர் சண்முகம் ஆகியோர், தேர்தலை எதிர்கொள்வது, அனைத்து பூத் கமிட்டிகளுக்கும் தேர்தல் பணிகள், அனைத்து சமுதாய பிரதிநிதிகளை சந்திப்பது குறித்தும், முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவது, அதிக ஓட்டு வித்தியாசத்தில் நீலகிரி லோக்சபா வேட்பாளரை வெற்றி பெற செய்வது என அறிவுறுத்தப்பட்டது.கோவைக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்தும், அவிநாசி தொகுதியில் இருந்து அதிக எண்ணிக்கையில் தொண்டர்களையும், பொது மக்களை அழைத்துச் செல்வது என இக்கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.இதில், அவிநாசி ஒன்றிய மண்டல தலைவர்கள் கணேசன், ஜெயப்பிரகாஷ், ஜெகதீஸ்வரன், தினேஷ்குமார், அன்னுார் ஒன்றிய தலைவர்கள் ரத்தினசாமி, திருமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ