உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆக்கிரமிப்புகளால் பாதியானது பைபாஸ் ரோடு: நிரந்தரமானது போக்குவரத்து நெரிசல்

ஆக்கிரமிப்புகளால் பாதியானது பைபாஸ் ரோடு: நிரந்தரமானது போக்குவரத்து நெரிசல்

உடுமலை: உடுமலை, பைபாஸ் ரோட்டில் ஆக்கிரமிப்பு நிரந்தரமாக உள்ளதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதற்கு தீர்வு காண, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொள்ளாச்சி ரோடு, தளி ரோடு, திருப்பூர் ரோடு மற்றும் தாராபுரம் ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள், பஸ் ஸ்டாண்ட் மற்றும் பழநி ரோடு, ராஜேந்திரா ரோடு மற்றும் நகருக்குள் வருவதற்கு, பிரதான வழித்தடமாக பைபாஸ் ரோடு உள்ளது. ஒரு வழித்தடமாக உள்ள இந்த ரோட்டில், அரசு போக்குவரத்து கழக பணி மனை முதல் பஸ் ஸ்டாண்ட் வரை, ஆக்கிரமிப்புகள் அதிகளவு காணப்படுகிறது. இந்த ரோட்டிலுள்ள கட்டடங்கள், உள்ளூர் திட்ட குழும விதிமுறை மீறி, வாகன நிறுத்தும் இடம், பக்க திறவிடம் உள்ளிட்ட எந்த வழிமுறையும் பின்பற்றாமல் அமைக்கப்பட்டுள்ளதோடு, ரோட்டை ஆக்கிரமித்தும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. விளம்பர தட்டிகள், பலகைகளையும் ரோட்டிலேயே வைத்துள்ளனர். கடைகள், வணிக வளாகங்களுக்கு வரும் வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து வைக்கப்படுவதால், பெரும்பகுதி ரோடு மாயமாகியுள்ளது. அதே போல், இரவு நேரங்களில் ரோடு முழுவதும் தாறுமாறாக, ஏராளமான ஆம்னி பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், ரோட்டில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் அதிகளவு நடந்து வருகிறது. மேலும், அனுஷம் ரோடு, ஐஸ்வர்யா நகர் ரோடு சந்திக்கும் பகுதியிலுள்ள, அதிகளவு வாகனங்கள் நிறுத்தப்படுவதால், கடும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, நகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், பைபாஸ் ரோட்டிலுள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றவும், வாகன நிறுத்தங்களை வரன்முறைப்படுத்தவும் வேண்டும். ஆம்னி பஸ்களுக்கும் தனி இடம் ஒதுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை