அரசு கல்லுாரி அட்மிஷன் விண்ணப்பிக்க அழைப்பு
அவிநாசி : அவிநாசியில் செயல்படும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கு www.tngasa.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.மேலும் மாணவர் சேர்க்கை குறித்து கல்லுாரியில் உள்ள சேர்க்கை உதவி மையத்தை பெற்றோர்கள் அணுகி விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்.பி.ஏ., (ஆங்கிலம்), பி.ஏ., (பொருளாதாரம்) பி.காம்., பி.காம்., (சர்வதேச வணிகவியல்) பி.காம்., (வணிக நிர்வாகவியல்) பி.எஸ்.சி., (வேதியியல்) பி.எஸ்.சி., (கணினி அறிவியல்) பி.சி.ஏ., (கணினி பயன்பாட்டியல்) ஆகிய 8 இளம் நிலை பாடப் பிரிவுகள் உள்ளது; வரும் 27ம் தேதியுடன் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு இணையத்தில் விண்ணப்பிக்க இறுதி நாள் என முதல்வர் தெரிவித்துள்ளார்.