| ADDED : டிச 28, 2025 06:59 AM
திருப்பூர்: ஒருமுறை பயன்படுத்தி துாக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழித்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கும்வகையிலும், துணிப்பை பயன்பாட்டை அதிகரிக்கும் வகையிலும், தமிழக அரசு, மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை செயல்படுத்திவருகிறது. இந்த திட்டத்தில், தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும், மாநில அளவில் சிறந்த மூன்று பள்ளிகள், 3 கல்லுாரிகள், 3 வணிக நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, பரிசு வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகள், தொழில் நிறுவனங்கள், மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்க, மாவட்ட நிர்வாகமும், மாசுகட்டுப்பாடு வாரியம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மாசுகட்டுப்பாடு வாரிய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களின் அனைத்து இணைப்புகளிலும், தனிநபர், அமைப்பு தலைவர் முறையாக கையெழுத்திடவேண்டும். வரும் ஜனவரி 1 ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். தேர்வாகும் பள்ளி, நிறுவனங்களுக்கு, முதல் பரிசு, 10 லட்சம் ரூபாய், 2 ம் பரிசு 5 லட்சம், மூன்றாவது பரிசு, 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.