உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 2030க்குள் கார்பன் நியூட்ரல் நிலை

2030க்குள் கார்பன் நியூட்ரல் நிலை

திருப்பூர்: ரசாயனம் மற்றும் கழிவு நீர் மேலாண்மை குறித்த சிறப்பு கருத்தரங்கு திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் நடந்தது. பிராண்டிங் கமிட்டி தலைவர் ஆனந்த், துணை தலைவர் மேழிசெல்வன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.சங்க தலைவர் சுப்ரமணியன் பேசுகையில்,'' மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்ப்பு என, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். கடந்த மூன்று மாதங்களாக, திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகத்தில் வளர்ச்சிநிலை எட்டப்பட்டுள்ளது. சாதகமான சூழல் நிலவுவதால், இந்தாண்டு திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில், 15 சதவீத வளர்ச்சியை எட்ட முடியும்,'' என்றார்.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், 'பிராண்ட் திருப்பூர் கிரீன் திருப்பூர்' என்ற நிலையை எட்ட, 'பிராண்டிங்' மற்றும் 'சஸ்டெய்னபிலிட்டி' துணை கமிட்டி நேர்த்தியான திட்டமிடலுடன் இயங்கி வருகிறது.காற்று, நீர், நிலம் என இயற்கைக்கு எவ்வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில், திருப்பூர் கிளஸ்டர் இயங்கி வருகிறது. உலகில் எங்கும் இல்லாத, 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை, சாயக்கழிவு சுத்திகரிப்புக்கு பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது. துணை தலைவர் இளங்கோவன் பேசுகையில்,''திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், பசுமை சார் உற்பத்திக்கு மாறிவருகின்றனர்.வரும், 2030ம் ஆண்டுக்குள், 'கார்பன் நியூட்ரல்' நிலையை திருப்பூர் அடையும், '' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை