உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நீட் தேர்வு வினாத்தாள் முறையில் மாற்றம்

நீட் தேர்வு வினாத்தாள் முறையில் மாற்றம்

திருப்பூர்; தேசிய தேர்வு முகமை வாயிலாக மருத்துவ படிப்புக்கான 'நீட்' நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில் நடக்கவுள்ள 'நீட்' தேர்வு வினாத்தாள் முறையில் மாற்றம் செய்துள்ளதாக, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.திருப்பூர் மாவட்ட 'நீட்' தேர்வு, ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் கூறியதாவது:'நீட்' தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய 4 பாடப்பிரிவுகளில் ஒரு பாடப்பிரிவுக்கு, 45 வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். பிரிவு 'ஏ', பிரிவு 'பி' என 2 பிரிவுகளாக கேள்வி கேட்கப்படும். பிரிவு 'ஏ'-ல், ஒவ்வொரு பாடத்துக்கும் தலா, 35 வினாக்கள் கேட்கப்படும். பிரிவு 'பி'-ல், 15 வினாக்கள் கேட்கப்பட்டு அதில் நன்கு தெரிந்த, பத்து வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் வினாத்தாள் இருந்தது; மொத்தம் 180 வினாக்களுக்கு ஒரு கேள்விக்கு நான்கு மதிப்பெண் வீதம், மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது.நடப்பாண்டு இத்தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என மொத்தம், 180 வினாக்கள் கேட்கப்படும். மொத்தம் 720 மதிப்பெண்கள். பிரிவு 'ஏ' மட்டுமே இடம்பெற்றிருக்கும். பிரிவு 'பி' இனி கிடையாது. அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும்; சாய்ஸ் கிடையாது; தெரியாத வினாக்களை விட முடியாது. 'நீட்' தேர்வுக்கு தயாராகும் மாணவ-, மாணவியர் அறிந்து கொண்டு அதற்கேற்ப தயாராக வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை