உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அங்கன்வாடி மையத்தை மாற்றுங்க! பெற்றோர் எதிர்பார்ப்பு

அங்கன்வாடி மையத்தை மாற்றுங்க! பெற்றோர் எதிர்பார்ப்பு

உடுமலை; போடிபட்டியில் பூங்கா அருகில் உள்ள அங்கன்வாடியை, மீண்டும் பள்ளி வளாகத்தில் மாற்ற வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். போடிபட்டி ஊராட்சியில், இரண்டு அங்கன்வாடி மையங்கள் உள்ளன. ஒன்று ஊராட்சி நிர்வாக அலுவலகத்தின் அருகில் உள்ளது. மற்றொன்று விளையாட்டு பூங்கா அருகில் புதிய கட்டடத்தில் செயல்படுகிறது. இந்த மையம் முன்பு, போடிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டது. பள்ளி வளாகத்தில் செயல்பட்டபோது மையத்தில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்பட்டனர். தற்போது அங்கன்வாடி பள்ளியை விட்டு சிறிது துாரத்தில் உள்ளது. இதனால் புதிய அங்கன்வாடி மையத்தில் குறைவான குழந்தைகள் தான் வருகின்றனர். பள்ளியை சுற்றி குடியிருப்புகள் அதிகம் உள்ளன. அப்பகுதியிலிருந்து புதிய அங்கன்வாடி கட்டடம் தொலைதுாரம் உள்ளது. இதனால் பெற்றோர் குழந்தைகளை அழைத்து வருவதற்கு சிரமப்படுகின்றனர். பெற்றோருக்கு சிலருக்கு மட்டுமே வாகன வசதி இருப்பதால் அக்குழந்தைகள் தொடர்ந்து வருகின்றனர். ஆனால் மற்ற குழந்தைகள் நடந்து வர வேண்டியுள்ளது. புதிய அங்கன்வாடி இருந்தும் வர முடியாத நிலைதான் உள்ளது. அங்கன்வாடி மையத்தை மீண்டும் பள்ளி வளாகத்தில் மாற்றி அமைப்பதற்கு குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை