சென்னாக்கல்பாளையம் பசுமையால் செழிப்பாகும்
திருப்பூர்; 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், சென்னாக்கல்பாளையத்தில், 530 மரக்கன்றுகள் நடப்பட்டன.'வெற்றி' அறக்கட்டளையின், 'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில், 3.50 லட்சம் மரக் கன்றுகள் நட்டு வைக்கப்பட்டுள்ளன. பருவமழையை பயன்படுத்தி, மரக்கன்று நடவு பணி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், தாராபுரம் அடுத்துள்ள சென்னாக்கல்பாளையத்தில் நேற்று மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.சண்முக சிவராமகிருஷ்ணன், கீர்த்திவர்மன் ஆகியோருக்கு சொந்தமான, சல்லிக்குழி காட்டுத்தோட்டத்தில், மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. பெருநெல்லி -500, சந்தனம் -20, செம்மரம் -10என, 530 மரக்கன்றுகள் நடப்பட்டன.'வனத்துக்குள் திருப்பூர் -10' திட்டத்தில் மரக்கன்று நட்டு வைக்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் அணுகலாம் என, திட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.