உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குழந்தை திருமணம்; தொழிலாளி கைது

குழந்தை திருமணம்; தொழிலாளி கைது

பல்லடம் : பல்லடத்தில், 16 வயது சிறுமியை திருமணம் செய்துக்கொண்ட வாலிபரை போலீசார் சிறையில் அடைத்தனர்.திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்த செல்வம் மகன் நிதிஷ், 21. பல்லடத்தில் உள்ள தனியார் மில் ஒன்றில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்க்கிறார். பல்லடம், மங்கலம் ரோட்டை சேர்ந்த, 16 வயது சிறுமியை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.இது குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வர, பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். விசாரணை மேற்கொண்ட மகளிர் போலீசார், நிதிஷை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை