மேலும் செய்திகள்
'போதை இல்லா தமிழகம்' மாணவர்கள் உறுதிமொழி
01-Sep-2024
திருப்பூர்: திருப்பூர் தெற்கு உழவர் சந்தையில் அரசுக் கல்லுாரி மாணவ, மாணவியர் துய்மை பணி மேற்கொண்டனர்.இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில், தூய்மையே சேவை என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் துாய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வகையில், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு - 2 மாணவர் சார்பில், திருப்பூர், பல்லடம் ரோடு, தெற்கு உழவர் சந்தையில், மாநகராட்சி சுகாதாரத் துறையினருடன் இணைந்து துாய்மைப்பணி மேற்கொண்டனர்.மாணவ, மாணவியர் இரு குழுக்களாக பிரிந்து, மாநகராட்சி துப்புரவு ஊழியர்களுடன் இணைந்து காய்கறி கழிவுகளை அகற்றினர். அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். மாநகராட்சி சுகாதாரப்பிரிவு அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பங்கேற்ற மாணவ, மாணவியர் திடக்கழிவு மேலாண்மை நிலையத்தை பார்வையிட்டனர்.மாணவ செயலர்கள் கிருஷ்ணமுர்த்தி, மதுகார்த்திக், செர்லின், நவீன் குமார், தீபன்சந்தோஷ், தனுஜா தலைமையில் மாணவ, மாணவியர் துாய்மை உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். சுகாதார ஆய்வாளர் சின்னதுரை ஒருங்கிணைத்தார்.
01-Sep-2024