உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரூ.3.91 கோடி மதிப்பில் வளர்ச்சி பணி துவக்கம்

ரூ.3.91 கோடி மதிப்பில் வளர்ச்சி பணி துவக்கம்

திருப்பூர் : திருப்பூர் ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சியில், நமக்கு நாமே திட்டம், உள்கட்டமைப்பு வசதிகள் நிதி திட்டம், 15வது நிதிக்குழு மானியம், ஊராட்சி பொது நிதியில், புதிய திட்ட பணிகள் துவக்க விழா நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமைவகித்தார். அமைச்சர் சாமிநாதன், பணிகளை துவக்கி வைத்தார்.'நமக்கு நாமே' திட்டத்தில், பி.என்.,ரோடு, கணக்கம்பாளையம் பிரிவு முதல் ஆண்டிபாளையம் ஏ.டி., காலனி வாய்க்கால் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வழியாக சின்னப்பள்ளம் வரை மழைநீர் வடிகால் அமைக்கும் பணி; ஆண்டிபாளையம், கஸ்துாரிபாய் நகரில், புதிய தார்சாலை பணி.பதினைந்தாவது நிதிக்குழு மானிய திட்டத்தில், அய்யம்பாளையம் பகுதியில், குடிநீர் குழாய் விரிவு படுத்தி, 290 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கல்; ஊராட்சி பொதுநிதியில், ஆண்டிபாளையம் - பெருமாநல்லுார் செல்லும் ரோட்டில், விநாயகபுரம் தென்பகுதியில், கழிவுநீர் உறிஞ்சி வெளியேற்றும் கட்டமைப்பு பணி உள்பட, மொத்தம் 3.91 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு பணிகள் துவக்கிவைக்கப்பட்டது.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, பி.டி.ஓ., ராமமூர்த்தி, கணக்கம்பாளையம் ஊராட்சி தலைவர் சண்முக சுந்தரம், நமக்கு நாமே திட்டத்தில் பங்களிப்பு நிதி வழங்கிய டாலர் அப்பேரல்ஸ் ஏற்றுமதி நிறுவன நிர்வாக இயக்குனர் ராமமூர்த்தி மற்றும் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை