தொழில் நிறுவனங்கள் - வீடுகளில் ஒளி வெள்ளம் பாய்ச்சும் லை டெக்
''வீடுகளின் அழகுக்கு அழகு சேர்க்கும், 'ைஹடெக்' லைட்களை வாங்க பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களுக்கு செல்வதை தவிர்த்து, எங்கள் ேஷாரூமுக்கு வாடிக்கையாளர்கள் வரும் வகையில் 'லைட்' விற்பனையில் ஈடுபட்டு வருகிறோம்'' என்கின்றனர், திருப்பூர், பி.என்.ரோடு, மில்லர் ஸ்டாப் அருகில் செயல்படும் 'லை டெக்' ேஷாரூம் பங்குதாரர்கள் முத்துக்குமார் மற்றும் கார்த்திகேயன்.அவர்கள் மேலும் கூறியதாவது:சாதாரண, நடுத்தர மக்கள் துவங்கி பெரும் செல்வந்தர்கள் வரை, தங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற வீடுகளை கட்டும் போது, 'லைட்' பொருத்துவதில், நவீனத்தை விரும்புகின்றனர். தொழிற்சாலைகளிலும், மின் சிக்கனம், அழகான வடிவமைப்புடன் கூடிய 'லைட்'களை வாங்கி பொருத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர். 2004ல், துவங்கப்பட்ட எங்கள் நிறுவனத்தில், லைட்களுக்கு தேவையான 'சோக்' தயாரிப்பு மற்றும் 'லைட்' விற்பனையிலும் ஈடுபடுகிறோம்.இண்டஸ்டிரியல் லைட், அவுட்டோர் லைட் ஆகியவை எங்களின் சொந்த தயாரிப்பில் வழங்கி வருகிறோம்; அலங்கார விளக்குகளை இறக்குமதி செய்து, விற்பனை செய்கிறோம்.விப்ரோ லைட், ேஹவல்ஸ் ஓரியன்ட், கிராம்டன், ஆர்.ஆர்.,எச்.வி.எல்.எஸ்., மின் விசிறிகளின் நேரடி டீலராகவும் உள்ளோம். தற்போதைய நவீன தொழில்நுட்ப தயாரிப்பில், மொபைல் செயலி, ரிமோட் கன்ட்ரோல் வாயிலாக இயங்க வைக்க கூடிய லைட், மின்விசிறி எங்களிடம் விற்பனைக்குள்ளன. திருப்பூரில் எங்குமில்லாத வகையில், 'ஸ்கை லைட்' எனப்படும் சூரிய வெளிச்சத்தை அப்படியே வீட்டினுள் கொண்டு வரும் 'லைட்' உள்ளது.வீடு, தொழில் நிறுவனங்கள் மற்றும் அலுவலக கட்டுமானங்களில் பிரம்மாண்டம், அழகை கூட்டும் டிசைன்கள் உள்ளன. 'நிறைவான தரம், நியாயமான விலை' என்ற கோட்பாடுடன் செயல்படுவதால், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை தக்க வைத்துள்ளோம். கூடுதல் விவரங்களுக்கு, 98940 77685, 98940 47685 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.