மேலும் செய்திகள்
மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் இரவில் ரோந்து
10-Apr-2025
திருப்பூர்; அனுமதி பெறாத, சாயக்கழிவுநீரை திறந்துவிட்ட நிறுவனங்கள் மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் 'பிடி'யில் சிக்கின.திருப்பூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், புது பஸ் ஸ்டாண்ட் அருகே, முறைகேடாக இயங்கும் நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில், உரிய அனுமதி பெறாமலும், சுத்திகரிக்காத சாயக்கழிவுநீரை திறந்துவிட்ட, ஒரு பட்டன், ஜிப் டையிங் நிறுவனம் மற்றும் அடுத்தடுத்து செயல்பட்ட நான்கு பிரின்டிங் நிறுவனங்கள் சிக்கின. இந்த ஐந்து நிறுவனங்களின் மின் இணைப்பு துண்டித்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
10-Apr-2025