உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நகரில் வளர்ச்சி பணிகள்; மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

நகரில் வளர்ச்சி பணிகள்; மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சி, சின்னான் நகரில், 2 எம்.எல்.டி., திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.அதேபோல் நடராஜா தியேட்டர் பகுதியில் உயர் மட்டப் பாலம் கட்டும் பணி நடக்கிறது.கோவில்வழியில் கட்டப்பட்டு வரும் மூன்றாவது பஸ் ஸ்டாண்டில், கட்டுமானப் பணிகள் பெருமளவு நிறைவடைந்து தற்போது, பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணிகளை நேற்று மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி நேரில் பார்வையிட்டு, பணி நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.அதன்பின், கோவில்வழியில் உள்ள தெரு நாய்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் மையத்திலும், கே.எம்.ஜி., நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவையும் கமிஷனர் பார்வையிட்டார்.முதன்மை பொறியாளர் செல்வநாயகம், பொறியாளர்கள் முனியாண்டி, ஆறுமுகம், மாநகர் நல அலுவலர் முருகானந்த் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை