உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு அதிகாரிகளை கண்டித்து ஆவேசம்

பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு அதிகாரிகளை கண்டித்து ஆவேசம்

உடுமலை: மடத்துக்குளம் பேரூராட்சியில், மக்களுக்கான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளாததால், அதிகாரிகளுடன் கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.மடத்துக்குளம் பேரூராட்சி கூட்டம், தலைவர் கலைவாணி (தி.மு.க.,) தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ரங்கநாதன், செயல் அலுவலர் சதீஷ்குமார் முன்னிலை வகித்தனர்.இதில், கவுன்சிலர்கள் பேசியதாவது:அம்ரூத் திட்டத்தின் கீழ், ரூ.22 கோடி மதிப்பில், குடிநீர் திட்ட பணி நடந்து வருகிறது. 36 கி.மீ., நீளத்துக்கு, புதிய குடிநீர் குழாய் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், குடிநீர் திட்ட விஸ்தரிப்பு மற்றும் அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்பு வழங்காமல், 40 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட குழாய்களில் இணைப்பதோடு, புதிய இணைப்பு வழங்கினால், யாருக்கும் தண்ணீர் போய் சேராது.ஆனால், பழைய குடிநீர் இணைப்புகளையும், புதிய குடிநீர் இணைப்பு வழங்குவதாக கணக்கு காட்டி, பெரும் முறைகேடு நடந்து வருகிறது.அம்ரூத் திட்ட குளறுபடியால், 35 ஆயிரம் மக்களுக்கும் முறையாக குடிநீர் சென்று சேராது. எனவே, திட்ட குளறுபடியை சரி செய்து, புதிய சம்ப், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைப்பதோடு, பழைய குழாய்களை மாற்றி விட்டு, கூடுதல் நீர் வினியோகிக்கும் வகையில், புதிய குழாய்கள் அமைக்க வேண்டும்.அதே போல், மடத்துக்குளம் பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், சுகாதாரப்பணி, குடிநீர், ரோடு, தெரு விளக்கு என அடிப்படை வசதிகள் முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை.ஆனால், மன்ற தீர்மானத்தில் பணிகள் நடந்ததாக, செலவுக்கணக்கு மட்டும் காட்டப்படுகிறது. மக்களுக்கு எந்த விதமான அடிப்படை வசதிகளும் செய்யாததால், வார்டுக்குள் செல்ல முடிவதில்லை. அதிகாரிகள் அலட்சியத்தால், மக்கள் பணிகள் பாதித்து வருகின்றன.இவ்வாறு, பேசினர்.அதிகாரிகளை கண்டித்து, கவுன்சிலர்கள் காரசாரமாக விவாதம் செய்த நிலையில், செயல் அலுவலர் மற்றும் அதிகாரிகள் முறையாக பதில் அளிக்காததால், அ.தி.மு.க., கவுன்சிலர்கள், 3 பேர் வெளிநடப்பு செய்தனர்.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளின் கவுன்சிலர்களும், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், தீர்மானங்களும் படிக்கப்படவில்லை. இதனால், பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை