தென்னையில் ஊடுபயிராக கோகோ சாகுபடி
உடுமலை; நீர் வளம் மிகுதியான பகுதிகளில், தென்னைக்கு ஊடுபயிராக 'கோகோ' சாகுபடி செய்ய, உடுமலை பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.உடுமலை சுற்றுப்பகுதியில், பிரதான சாகுபடியாக உள்ள தென்னையில், கூடுதல் வருவாய்க்கு, ஊடுபயிர் சாகுபடி செய்ய, தோட்டக்கலைத்துறை வாயிலாக வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.அதில், நிலையான வருவாய் தரும், 'கோகோ' சாகுபடிக்கு, பல்வேறு மானியத்திட்டங்களும் வழங்கப்பட்டு வந்தது. அவ்வகையில், நீர் வளம் மிக்க, பகுதிகளில், தென்னந்தோப்புகளில், ஊடுபயிராக 'கோகோ' சாகுபடி செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.விவசாயிகள் கூறியதாவது: தென்னைக்கு ஊடுபயிராக 'கோகோ' சாகுபடி செய்வதால், பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. 'கோகோ' இலை, தோப்பு முழுவதும், பரவி, தென்னை மரங்களுக்கு சிறந்த மூடாக்காக பயன்படுகிறது.நாற்று நடவு செய்த, மூன்றாண்டுகளில் காய்ப்புக்கு வரும். ஆண்டுக்கு ஒரு மரத்துக்கு, இரண்டு முதல் மூன்று கிலோ வரை 'கோகோ' விதை கிடைக்கும். ெஹக்டேருக்கு, 250 நாற்றுகள் வரை நடவு செய்யலாம்.இவ்வாறு, தெரிவித்தனர்.