உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கரும்பு - வாழையில் அலங்காரம்: கந்த சஷ்டி விழா கோலாகலம்

கரும்பு - வாழையில் அலங்காரம்: கந்த சஷ்டி விழா கோலாகலம்

பல்லடம்: கரும்பு மற்றும் வாழை மரங்களால் தோரணங்கள், அலங்கார வளைவுகள் உருவாக்கப்பட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா அபாரமாக நடந்தது. பல்லடம் வட்டாரத்தில் பிரசித்தி பெற்ற மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. முன்னதாக, கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, விழா முன்னேற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. இதன் ஒரு பகுதியாக, கோவில் நுழைவு வாயில், திருக்கல்யாண மண்டபம், சன்னதிக்குச் செல்லும் வழி, கோவில் கருவறை உள்ளிட்ட பகுதிகளில், கரும்பு மற்றும் வாழை மரங்களால் ஆன தோரணங்கள், அலங்கார வளைவுகள் உருவாக்கப்பட்டிருந்தன. விவசாயிகளுக்கு ஆதரவு தரும் வகையில், விழாக் குழுவின் இந்த செயல் பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கோவில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் ஜொலித்தன. அடிக்கடி மழை பெய்து வரும் நிலையில், பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, திருக்கல்யாணம் நடைபெறும் இடத்தில், மேற்கூரை அமைக்கப்பட்டிருந்தது கூடுதல் சிறப்பு. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரும், வாகனங்களை முறையாக பார்க்கிங் செய்ய அறிவுறுத்தியதால், பார்க்கிங் பிரச்னை ஏற்படாததால், பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை