உள்ளூர் செய்திகள்

மான் பலி

பொங்கலுார்: பொங்கலுார், கண்டியன் கோவில் வழியாக செல்லும் உப்பு கரை நதி படுகையில் பத்துக்கும் மேற்பட்ட மான்கள் வசித்து வருகின்றன. பெரியாரியபட்டி அருகே தனியார் நிலத்தில் ஒரு வயது உள்ள மான் ஒன்று இறந்து கிடந்தது. இது குறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை, வருவாய் துறை, கால்நடை துறை அலுவலர்கள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். தலையில் அடிபட்ட காயம் இருந்தது. கம்பி வேலியில் மோதி இறந்திருக்கலாம் என்று தெரிகிறது. இறந்து சில நாட்கள் ஆகி இருக்கும் என்பதால் கடும் துர்நாற்றம் வீசியது. எனவே, அதை அங்கேயே குழி தோண்டி புதைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை