உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வளர்ச்சி பணிகள்; கமிஷனர் ஆய்வு

வளர்ச்சி பணிகள்; கமிஷனர் ஆய்வு

திருப்பூர்; திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60வது வார்டு கோவில் வழியில், மாநகராட்சி சார்பில் புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.தாராபுரம் வழியாக தென் மாவட்டங்களிலிருந்து திருப்பூர் வந்து செல்லும் பஸ்கள் இந்த பஸ் ஸ்டாண்டிலிருந்து இயக்கப்படுகிறது.மத்திய பஸ் ஸ்டாண்ட் புதுப்பித்து கட்டும் பணி மேற்கொள்ளப்பட்ட போது, தற்காலிக பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டது. தற்போது, நிரந்தர பஸ் ஸ்டாண்டாக மாற்ற தீர்மானிக்கப்பட்டது.அவ்வகையில், பஸ் ஸ்டாண்ட் வளாகம் கட்டப்பட்டுள்ளது.கட்டுமானப் பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. நேற்று இப்பணிகளை மாநகராட்சி கமிஷனர் ராமமூர்த்தி ஆய்வு செய்து, பணிகள் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின் போது தலைமை பொறியாளர் செல்வநாயகம் மற்றும் பொறியாளர்கள் உடனிருந்தனர். முன்னதாக, 24 வது வார்டு செல்லம்மாள் காலனி மாநகராட்சி பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணிகளையும், கமிஷனர் பார்வையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை