உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

உடுமலை : உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பாத்திரமேற்று நடித்தல் போட்டியில், மாவட்ட அளவில் வெற்றி பெற்றனர். மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், கோவை ராஜவீதியிலுள்ள ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், மாவட்ட அளவிலான மக்கள் தொகை கல்வி தொடர்பான தேசிய அளவிலான பாத்திரமேற்று நடித்தல் போட்டி நடந்தது. இதில், கோவை, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 22 வட்டங்களிலிருந்து முதலிடம் பெற்ற 22 பள்ளிகள் பங்கேற்றன. அதில், உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் மாணிக்கவல்லி, நர்மதப்பிரியா, கிருத்திகா, அலிப்ரோஜா, ரிஜ்வானா ஆகியோர் பங்கேற்று, பாத்திரமேற்று நடித்தல் போட்டியில் முதலிடம் பெற்றனர். திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் பிரேம் அதிபன் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கினார். மாணவிகள் திருச்சியில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்கும் தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகள், மாணவிகளுக்கு ஊக்கமளித்த ஆசிரியர்கள் சின்னராசு, சோபியா ஞானசவுந்தரி, திலகவதி ஆகியோருக்கு பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணன், உதவித் தலைமையாசிரியர் மாரிமுத்து, பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை