மாவட்ட டென்னிகாய்ட்: மாணவியர் உற்சாகம்
திருப்பூர்; பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான டென்னிகாய்ட் போட்டி திருப்பூர் வித்ய விகாசினி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. வித்ய விகா சினி பள்ளி தாளாளர் தர்மலிங்கம் தலைமை வகித்தார். வெற்றி பெற்றோர் விவரம்: ஒற்றையர், 14 வயது பிரிவில் காங்கயம் ஜேசீஸ் மெட்ரிக் பள்ளி முதலிடம், கருப்பகவுண்டம்பாளையம் அரசுப்பள்ளி இரண்டாமிடம், 17 வயது பிரிவில் ஜேசீஸ் பள்ளி முதலிடம், அவிநாசி எம்.எஸ்.வித்யாலயா இரண்டாமிடம், 19 வயது பிரிவில் அவிநாசி ஸ்ரீ சாய் மெட்ரிக் முதலிடம், உடுமலை லயன்ஸ் பள்ளி இரண்டாமிடம் பெற்றது. இரட்டையர் 14 வயது பிரிவில் அவிநாசி எம்.எஸ்.வித்யாலயா முதலிடம், திருப்பூர் வித்ய விகாசினி மெட்ரிக் பள்ளி இரண்டாமிடம், 17 வயது பிரிவில் காங்கயம் ஜேசீஎஸ் பள்ளி முதலிடம், அவிநாசி எம்.எஸ்.வித்யாலயா இரண்டாமிடம், 19 வயது பிரிவில் தாராபுரம் செயின்ட் அலோஷியஸ் பள்ளி முதலிடம், உடுமலை எஸ்.கே.பி. மெட்ரிக் இரண்டாமிடம் பெற்றனர்