காணொலியில் தி.மு.க., ஆலோசனை கூட்டம்
ஓசூர்:கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனை கூட்டம், ஓசூர் தொகுதிக்கு தின்னுார் வி.என்.பி., திருமண மண்டபத்திலும், தளி தொகுதிக்கு தேன்கனிக்கோட்டை சப்தகிரி மண்டபத்திலும், வேப்பனஹள்ளி தொகுதிக்கு சூளகிரி எஸ்.ஏ.எஸ்., மண்டபத்திலும் தனித்தனியாக நடந்தன. மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார்.கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி காணொலி காட்சி மூலம், கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். அப்போது, 'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கையை ஒவ்வொரு தொகுதியிலும் தீவிரப்படுத்தி, செப்., மாதத்திற்குள் முடிக்க வேண்டும். 60 சதவீதம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். தகுதியான மகளிருக்கு மாத உரிமை தொகை கிடைக்க கட்சியினர் உதவ வேண்டும், என்றார்.மாவட்ட பொருளாளர் சுகுமாரன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளர் மாதேஸ்வரன், துணை மேயர் ஆனந்தய்யா, தலைமை செயற்குழு உறுப்பினர் எல்லோராமணி, மாணவரணி மாவட்ட அமைப்பாளர் கண்ணன், பகுதி செயலாளர்கள் வெங்கடேஷ், ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.--* கிருஷ்ணகிரியில், கிழக்கு மாவட்ட, தி.மு.க., நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் காணொலி காட்சி மூலம் நேற்று நடந்தது. இதில், அமைச்சர் சக்கரபாணி பேசினார். கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். இதில், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசுமூர்த்தி, நகர்மன்ற தலைவர் பரிதாநவாப், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் அன்பரசன், பொதுக்குழு உறுப்பினர் சித்ரா சந்திரசேகர், நகர செயலாளர்கள் அஸ்லாம், வேலுமணி உள்பட பலர் பங்கேற்றனர்.