உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

உடுமலை; உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரி மாணவியர் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரி தேசிய மாணவர் படை மாணவியர், போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி சென்றனர். கல்லுாரி செயலாளர் சுமதி முன்னிலை வகித்தார். கல்லுாரி இயக்குனர் மஞ்சுளா, கல்லுாரி முதல்வர் கற்பகவள்ளி பேரணியை துவக்கி வைத்தனர்.கல்லுாரியில் துவங்கி உடுமலை பஸ் ஸ்டாண்ட் வரை மாணவியர் பேரணியாக சென்றனர். போதை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்தும் சென்றனர். கல்லுாரி தேசிய மாணவர் படை அலுவலர் பேரணியை வழிநடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை