மேலும் செய்திகள்
வீடு எரிந்து சேதம்
10-Oct-2025
திருப்பூர்: திருப்பூரில் போதை தலைக்கேறியதில் தனது வீட்டுக்கு தீ வைத்த பனியன் தொழிலாளியிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். திருப்பூர், ராயபுரம், கல்லம்பாளையத்தை சேர்ந்தவர் செல்லப்பா, 30. பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களாக மனைவியுடன் குடும்ப பிரச்னை உள்ளது. நேற்று காலை இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. மனைவியை வெளியே அனுப்பி விட்டு, போதையில் இருந்த செல்லப்பா வீட்டை பூட்டி விட்டு தீ வைத்தார். தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தீ விபத்தில், வீட்டுக்குள் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது. திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
10-Oct-2025