உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  அறுவடைக்கு தயாரான பீட்ரூட் விலை கிடைக்க எதிர்பார்ப்பு

 அறுவடைக்கு தயாரான பீட்ரூட் விலை கிடைக்க எதிர்பார்ப்பு

உடுமலை: அறுவடைக்கு தயாராக உள்ள பீட்ரூட்டுக்கு, நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உடுமலை வட்டார விவசாயிகள் உள்ளனர். உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றிற்கு தேவைகள் இருப்பதால், விவசாயிகள் ஆர்வத்துடன் இச்சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், கிணற்றுப்பாசனத்துக்கு இரு சீசன்களில், பீட்ரூட் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக, களிமண் விளைநிலங்களில், இச்சாகுபடியில் நல்ல விளைச்சல் கிடைக்கிறது. வழக்கமாக, ஜூலை, ஆக., மாதங்களில் நடவு செய்கின்றனர். தற்போது, ராகல்பாவி, கணபதிபாளையம், விருகல்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில், பீட்ரூட் அறுவடைக்கு தயாராக உள்ளது. விவசாயிகள் கூறுகையில், 'நடப்பு சீசனில், தொடர் மழையால், பீட்ரூட் அறுவடை பணிகள் தாமதித்துள்ளது. ஏக்கருக்கு, 20 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக செலவாகிறது. சீதோஷ்ண நிலை மாற்றத்தால், பூச்சி தாக்குதல் ஏற்பட்டு, கூடுதல் செலவானது. ஏக்கருக்கு, 10-15 டன் வரை மகசூல் கிடைத்து வருகிறது. சில நாட்களில், அறுவடை துவங்கும். நடப்பு சீசனில், பீட்ரூட்டுக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை