உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஏற்றுமதி வர்த்தகர் கடத்தல்

ஏற்றுமதி வர்த்தகர் கடத்தல்

திருப்பூர், மாஸ்கோ நகரை சேர்ந்த அப்துல் முனாப், 45. பனியன் துணி ஏற்றுமதி வர்த்தகம் செய்துவருகிறார். மங்கலத்தை சேர்ந்த சலாவுதீன், குமார் ஆகியோரிடமிருந்து அப்துல் முனாப் பனியன் துணி வாங்கியுள்ளார்.நேற்றுமுன்தினம், அப்துல் முனாப்பை, மாஸ்கோ நகரில் வைத்து, சலாவுதீன், 40; முபாரக், 40; குமார், 38 ஆகிய மூவரும் சேர்ந்து, காரில் கடத்திச்சென்று பனியன் துணிக்கான பணம் 2.75 லட்சம் ரூபாயை கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த திருப்பூர் வடக்கு போலீசார், அப்துல் முனாப்பை மீட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சலாவுதீனை கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள முபாரக், குமாரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை