உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பேரூராட்சி தலைவர் பதவி நீக்கம்; விவசாய சங்கம் வலியுறுத்தல்

பேரூராட்சி தலைவர் பதவி நீக்கம்; விவசாய சங்கம் வலியுறுத்தல்

பல்லடம்; சமூக ஆர்வலரை கார் ஏற்றி கொலை செய்த சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிசாமியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் திருப்பூர் மாநகர செயலாளர் ரமேஷ், கலெக்டரிடம் அளித்த மனு: சாமளாபுரம் பேரூராட்சியின் ஊழல் முறைகேடுகளை சட்டத்துக்கு உட்பட்டு, பல்வேறு துறைகளுக்கு மனு அனுப்பி, ஊழலை அம்பலப்படுத்திய, சமூக ஆர்வலர் பழனிசாமி என்பவரை, பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிசாமி, நேரடியாக வாகனத்தை ஏற்றி படுகொலை செய்துள்ளார். இந்த கொடூர சம்பவமானது, திட்டமிட்டு உள்நோக்கத்தோடு செய்யப்பட்டுள்ளதை, அனைத்து சாட்சிகளும் உறுதிப்படுத்தி உள்ள சூழலில், இதுவரை அவர் பேரூராட்சி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படாமல் உள்ளது, மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. எனவே, விநாயகா பழனிசாமியை உடனடியாக பதவி நீக்கம்செய்வதுடன், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை