உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  விவசாயிகளுக்கு சம்மன்: போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

 விவசாயிகளுக்கு சம்மன்: போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பையை இடுவாய், சின்னக்காளிபாளையத்தில் கொட்ட, ஐந்து கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர். இதுதொடர்பான வழக்கும் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில், குப்பை விவகாரத்தில் போராடிய மக்களில், 12 பேருக்கு நேற்று சம்மன் வழங்கப்பட்டு மங்கலம் ஸ்டேஷனில் ஆஜராக உத்தரவிட்டு இருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் ஸ்டேஷனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் பேச்சு நடத்தினர். அதில், இதற்கு முன்பு, 30 பேர் மீது போடப்பட்ட வழக்கும், தற்போது, 12 பேருக்கு வழங்கப்பட்ட சம்மன் தொடர்பாக, எவ்வித மேல்நடவடிக்கையும் இருக்காது என உறுதியளித்தார். இதனால், அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ