உடுமலை - மூணாறு ரோட்டில் பாஸ்ட் டிராக் முறை அமல்
உடுமலை : உடுமலையில் இருந்து, கேரள மாநிலம் மூணாறு செல்லும் ரோடு, ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இந்த ரோட்டில் பயணிக்கும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இரு சக்கர வாகனங்களுக்கு, ரூ.20, கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களுக்கு ரூ.50 மற்றும் கனரக வாகனங்களுக்கு, ரூ.100 வசூலிக்கப்படுகிறது. இதுவரை, வனத்துறை ஊழியர்களால் நேரடியாக வசூலிக்கப்பட்டு, ரசீது வழங்கப்பட்டு வந்தது.தற்போது, சுங்க கட்டணங்கள் வசூலிக்கும் முறையாக 'பாஸ்ட் டிராக்' முறையில், வனத்துறை சோதனை சாவடியை கடக்கும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், வனத்துறை ஊழியர்கள் பணி குறைவதோடு, முறைகேடுகளை தடுக்க முடியும்.இத்தொகை, ஆனைமலை புலிகள் காப்பக அறக்கட்டளை வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இத்தொகை வாயிலாக, வனம், மலைவாழ் மக்கள் மேம்பாடு மற்றும் தற்காலிக பணியாளர்களுக்கு ஊதியம் உள்ளிட்டவை வழங்கப்படுவதாக, வனத்துறையினர் தெரிவித்தனர்.