உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குப்பை கிடங்கில் தீ விபத்து

குப்பை கிடங்கில் தீ விபத்து

திருப்பூர் : காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட, 18 வார்டுகளில் சேகரமாகும் குப்பைகளை லாரிகள் மூலம் சேகரித்து, சென்னிமலை ரோட்டில் உள்ள, ஐந்து ஏக்கர் பரப்பில் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. குப்பைகளை தரம் வாரியாக பிரித்து அவற்றை, மறுசுழற்சி செய்யப்படுகிறது.குப்பை கொட்டப்பட்டுள்ள இடத்தில் திடீரென தீ பிடித்து நேற்று எரிந்தது. தகவலறிந்து சென்ற காங்கயம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.இதன் காரணமாக அப்பகுதியை சுற்றியும் புகை மண்டலமாக காட்சியளித்தது. தீ விபத்து குறித்து காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ