உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநில அளவில் முதல் மதிப்பெண்; ஐ.டி.ஐ., மாணவருக்கு பாராட்டு

மாநில அளவில் முதல் மதிப்பெண்; ஐ.டி.ஐ., மாணவருக்கு பாராட்டு

உடுமலை : மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற, உடுமலை தொழிற்பயிற்சி நிலைய மாணவருக்கு பேராசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், இறுதியாண்டு மெக்கானிக் மோட்டார் வாகனம் தொழிற்பிரிவில், மாணவர் இஷாக்அகமதுெஷரிப் தொழிற்பயிற்சி படிப்புக்கான தேர்வில், மொத்தமாக, 1,200க்கு, 1,168 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.இதையொட்டி, சென்னையில் நடந்த விழாவில், தொழிலாளர்நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன், மாணவருக்கு சான்றிதழ் வழங்கினார்.இம்மாணவருக்கு, உடுமலை தொழிற்பயிற்சி நிலைய பேராசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, இம்மாணவருடன் மூன்று மாணவர்கள் இணைந்து செய்த, புராஜெக்ட் மாநில அளவில் முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.வெற்றி பெற்ற மாணவருக்கும், பயிற்சி அளித்த பயிற்றுனர் சேகர், பயிற்சி அலுவலர் ரமேஷ்குமார் உள்ளிட்டோருக்கும் முதல்வர் நதிச்சந்திரன், உடுமலை கல்வியாளர்கள் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை