வேலம்பாளையம் ஜி.ஹெச்.-ல் முதல் அறுவை சிகிச்சை வெற்றிகரம்
திருப்பூர்: திருப்பூர், 15 வேலம்பாளையம் அரசு மருத்துவமனையில் முதல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. அனுப்பர்பாளையம் அருகே 15.வேலம்பாளையத்தில் அதிநவீன இயந்திரங்களுடன் அரசு மருத்துவமனை உள்ளது. மருத்துவமனை செயல்பாட்டுக்கு வந்த பின், நேற்று முதலாவது அறுவை சிகிச்சை நடைபெற்றது. திருப்பூர், சிறுபூலுவபட்டி பகுதியைச் சேர்ந்த 44 வயது பெண்ணுக்கு, இடது புற காதில் செவித்திரையில் துளை ஏற்பட்டது.அதனை எண்டோஸ்கோபிக் முறையில், சிகிச்சை மூலம் அடைத்தனர். இதனை 15.வேலம்பாளையம் அரசு மருத்துவமனை முதன்மை தலைமை மருத்துவ அலுவலர் (பொறுப்பு) சதீஷ்குமார் ,காது அறுவை சிகிச்சை மருத்துவர்கள் பாலாஜி, சூரியலட்சுமி, தனுரா உள்ளிட்ட சிறப்பு மருத்துவ குழுவினர் வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை செய்தனர்.