உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கரைப்புதுார் ஊராட்சியில் குப்பைக் குன்றுகள்

கரைப்புதுார் ஊராட்சியில் குப்பைக் குன்றுகள்

பல்லடம், : பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சிக்கு உட்பட்ட அருள்புரம், லட்சுமி நகர், தண்ணீர் பந்தல் பகுதிகளில், ஏராளமான குடியிருப்புகள், வணிக வளாகங்கள், கடைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்டவை உள்ளன. குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் இருந்து வீசப்படும் குப்பைகள், கழிவுகளால் கடும் மாசு ஏற்படுகிறது. குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. நீண்ட நாட்களாக குப்பைகள் அகற்றப்படாததால், எங்கு பார்த்தாலும் குன்றுகள் போல் குப்பைகள் குவிந்துள்ளன. துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்களுக்கு நோய் தொற்று அபாயம் ஏற்பட்டு வருகிறது.ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கும் கரைப்புதுார் ஊராட்சியில் போதிய துப்புரவு பணியாளர்களும் இல்லாததால், குப்பைகளை அகற்றுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. குப்பைகள், கழிவுகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை