உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  குப்பை லாரி சிறைபிடிப்பு

 குப்பை லாரி சிறைபிடிப்பு

அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாநகரில் சேகரமான குப்பைகளை, மாநகராட்சி அதிகாரிகள் 17வது வார்டு சின்ன பொம்மநாயக்கன் பாளையம் சுடுகாட்டில் கொட்டி வந்துள்ளனர். மக்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்தும், கொட்டப்பட்ட குப்பையை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த கோரியும் குப்பை லாரியை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் இனி இங்கு குப்பை கொட்ட மாட்டோம்; குப்பைகளை இரண்டு நாட்களில் அப்புறப்படுத்தி விடுவோம் என்று உறுதி கூறினர். அதன்பின் பொதுமக்கள் சிறை பிடித்த லாரிகளை பொதுமக்கள் விடுவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ