உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மூன்று ஊராட்சிகளில் கிராம சபா கூட்டம் ரத்து 

மூன்று ஊராட்சிகளில் கிராம சபா கூட்டம் ரத்து 

- நமது நிருபர் -: நவ. முதல் தேதி, உள்ளாட்சி தினம் முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது. அவ்வகையில் திருப்பூர் மாவட்டத்தில், 13 ஒன்றியங்களில் உள்ள 265 ஊராட்சிகளில் நடந்தது. இதில், திருப்பூர் ஒன்றியம், இடுவாய் மற்றும் முதலிபாளையம் ஊராட்சிகளிலும், பல்லடம் ஒன்றியம் வேலம்பாளையம் ஊராட்சியிலும், கிராம சபா கூட்டம் ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள 262 ஊராட்சிகளிலும் நடந்த கூட்டத்தில் மொத்தம் 18,682 ஆண்களும் 26,689 பெண்களும் பங்கேற்று, 4,837 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி