உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  கிடப்பில் பசுமை தீர்ப்பாய தீர்ப்பு

 கிடப்பில் பசுமை தீர்ப்பாய தீர்ப்பு

ந ல்லாறு மற்றும் நஞ்சராயன் குளம் மீட்டெடுப்பு தொடர்பாக, பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர். திருப்பூரில் உள்ள நஞ்சராயன் குளத்துக்கு, நல்லாற்றில் வரும் நீர் தான் ஆதாரம். கடந்த, 2000ம் ஆண்டுகளில், தொழிற்சாலை சாய கழிவுநீரால், நஞ்சராயன் குளத்துக்கு வந்து விழும் நீர் மாசுபடும் அபாயத்தை எட்டிய நிலையில், கடந்த, 2017ல், திருப்பூர் மண்ணரையை சேர்ந்த தாமோதரன் என்பவர், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தார். 'நஞ்சராயன் குளத்துக்கு நல்லாற்று நீர் தான் ஆதாரம்' என்பதை உணர்ந்த பசுமை தீர்ப்பாயம், நல்லாறு துவங்குமிடத்தில் இருந்து முடியுமிடம் வரையுள்ள ஆற்றின் நிலையை அறிந்து, அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. அதன்படி, உருவாக்கப்பட்ட கூட்டுக்கமிட்டியின் பரிந்துரைப்படி, கடந்த, 2022ல், தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவின் சாராம்சம்: n நல்லாறு நீர்வழித்தடத்தை பராமரித்து, எவ்வித தடையுமின்றி தண்ணீர் செல்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க, சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் வெளியேறுவதை நீர்வளத்துறையினர் உறுதிசெய்ய வேண்டும். n நல்லாற்றில் சுத்திகரிக் கப்படாத கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க, திருப்பூர் மாநகராட்சி மற்றும் நீர்வளத்துறையினரால் திட்டமிடப்பட்ட பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நீர்வளத்துறையினரால் தயாரிக்கப்பட்ட செயல் திட்டத்தை, மாநில மாசுக்கட்டுப்பாடு வாரியம் கண்காணிக்க வேண்டும். பணியில் தொய்வு தென்பட்டால் தேவையான தொழில்நுட்பட உதவியை வழங்க வேண்டும். n திருப்பூர் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள், திடக்கழிவு மேலாண்மை விதி, 2016 மற்றும் திரவக்கழிவு மேலாண்மை விதிகளை பின்பற்றாத நிலையில், உள்ளாட்சி நிர்வாகங்களிடம் இருந்து உரிய இழப்பீடு தொகையை, மாசுக்கட்டுப்பாடு வாரியம் வசூலிக்க வேண்டும். n நஞ்சராயன் ஏரியை பாதுகாக்கவும், நல்லாறு நீர் வழிப்பாதையை சுத்தப்படுத்த தேவையான நிதி ஒதுக்கீடுக்குரிய அனுமதியை, நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர்வளத்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறையினர் வழங்க வேண்டும்; திட்டம் நிறைவேற, நிதி பற்றாக்குறை தடையாக இருக்கக்கூடாது. n நீர்நிலையில் தொழிற்சாலைக் கழிவுகள் வெளியேற்றப்படுகிறதா என்பதை, மாநில மாசுக்கட்டுப்பாடு வாரியம், அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். ஏதேனும் விதிமீறல் கண்டறியப்பட்டால், அந்தந்த சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுப்பதுடன், இழப்பீட்டையும் வசூலிக்க வேண்டும். n சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேறுவதை தவிர்க்க, திருப்பூர் மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் பணியை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கண்காணித்து, அதுதொடர்பான அறிக்கையை அவ்வப்போது தாக்கல் செய்ய வேண்டும். நாளை... கான்கிரீட் காடான நெல் வயல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ