உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளிகளில் அதிகரித்திருக்கிறதா இடைநிற்றல்? கண்காணிக்கும் பொறுப்பில் மேலாண்மை குழு

பள்ளிகளில் அதிகரித்திருக்கிறதா இடைநிற்றல்? கண்காணிக்கும் பொறுப்பில் மேலாண்மை குழு

திருப்பூர்: 'பள்ளிகளில் இருந்து இடைநின்ற மாணவ, மாணவியர் இருக்கும் வாய்ப்பு இருப்பதால், அவர்களை அடையாளம் கண்டு, மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் பணியில், தனி குழு அமைக்க வேண்டும்' என பள்ளி கல்வித்துறை யோசனை தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தவும், கல்வித்தரத்தை உயர்த்தவும், பள்ளி கல்வித்துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. வரும், 7ம் தேதி அனைத்து பள்ளிகளிலும், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களின் நலன் சார்ந்த விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என, பள்ளி கல்வித்துறை அறிவுரை வழங்கியிருக்கிறது. பள்ளி மேலாண்மை குழுவில் உள்ள இல்லம் தேடி கல்வியாளர், முன்னாள் மாணவர்கள், சுய உதவிக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர் ஆகியோரை கொண்ட குழு அமைத்து, பள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட மாணவ, மாணவியரை அடையாளம் கண்டு, பட்டியலிட வேண்டும்; அவர்களை அருகேயுள்ள அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, வரும் ஆண்டு களில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவியரில் யாரேனும் இடைநின்றிருந்தால், அவர்களை அடையாளம் கண்டு, பொதுத்தேர்வெழுத செய்து, பள்ளி படிப்பை நிறைவு செய்ய வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், பள்ளி கல்வித்துறை யோசனை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை