உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஜம்மனை ஓடையில் சுகாதாரக்கேடு

ஜம்மனை ஓடையில் சுகாதாரக்கேடு

திருப்பூர்; திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில், காய்கறிகள் மொத்த விற்பனை மற்றும் சில்லரை விற்பனை நடக்கும், காய்கறி மார்க்கெட் உள்ளது. அதன் அருகிலேயே, பெரிய வெங்காயம் மண்டி உள்ளிட்ட கடைகளும் உள்ளன. அதனருகிலேயே, உழவர் சந்தை இயங்கி வருகிறது.காய்கறி மார்க்கெட்டுக்கு, தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். அருகில் உள்ள மீன் மார்க்கெட்டுக்கும் மக்கள் அதிகம் வருகின்றனர். மார்க்கெட்டுக்கு வந்து செல்வோரும், சேதமாகும் காய்கறிகளும், பாலிதீன் காகிதத்தில் வைத்து, ஜம்மனை ஓடையில் கொட்டப்படுகின்றன.உழவர் சந்தை எதிரே உள்ள, ஜம்மனை பாலத்தின் அருகே, காய்கறி கழிவுகள், பாலிதீன் காகிதத்தில் வைத்து ஓடைக்குள் வீசப்படுகிறது. மார்க்கெட்டுக்கு வந்து செல்வோரும், கழிவுகளை அங்கே வீசிச்செல்கின்றனர். இதனால், ஜம்மனை ஓடையில் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.காய்கறி மார்க்கெட் கழிவுகளை, ஜம்மனை ஓடையில் கொட்டுவதை தடுக்க வேண்டும். போதிய அளவு குப்பை தொட்டிகளை வைத்து, அதில் சேகரித்து அப்புறப்படுத்த, மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை