உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  எஸ்.ஐ.ஆர். பணிக்கு உதவி மையம் அமைப்பு 

 எஸ்.ஐ.ஆர். பணிக்கு உதவி மையம் அமைப்பு 

திருப்பூர்: திருப்பூர் தெற்கு தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் அமித் அறிக்கை: தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் வாக்காளர்களுக்கான கணக்கெடுப்பு படிவங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளது. தங்கள் குடும்பத்தில் வழங்கப்பட்ட படிவங்களை பூர்த்தி செய்து உடனுக்குடன் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் அல்லது ஓட்டுச் சாவடி மையங்களில் வழங்க வேண்டும். மேலும், இன்றும் நாளையும், (சனி மற்றும் ஞாயிறு) இரு நாட்களும், வீடுகள் தோறும் சென்று பி.எல்.ஓ.,க்கள் படிவங்களை பெற்றுக் கொள்வர். மேலும், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி உதவி மையம் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச் சாவடி மையங்களிலும், தங்களுக்கு வழங்கப்பட்ட படிவங்களை பூர்த்தி செய்து வாக்காளர்கள் வழங்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை