உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஹிந்து விழிப்புணர்வு யாத்திரை

ஹிந்து விழிப்புணர்வு யாத்திரை

அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், அகில பாரத ஹிந்து மஹா சபா சார்பில், ஹிந்து விழிப்புணர்வு யாத்திரை மற்றும் அயோத்தி பாலராமருக்கு அணிவிக்கப்படும் வெள்ளி கிரீடத்துக்கு சிறப்பு பூஜை நேற்று நடந்தது.தேசிய துணை தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். தேசிய தலைவர் சக்ரபாணி மஹராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தேசிய இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் சுபாஷ், மாநில செயல் தலைவர் செந்தில், மாநில இளைஞரணி தலைவருமான வல்லபை பாலா, மாவட்ட பொதுச் செயலாளர் சதீஷ், செயலாளர் சக்திவேல், இளைஞரணி தலைவர் அழகேந்திரன், கொங்கு மண்டல இளைஞரணி துணைத் தலைவர் கணேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் சிவகுருநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நிர்வாகிகள் கூறுகையில், 'அயோத்தி பாலராமருக்கு அணிவிக்க உருவாக்கப்பட்டுள்ள வெள்ளி கிரீடத்துக்கு, பேரூர் பட்டீஸ்வரர் கோவில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் என, தமிழகத்திலுள்ள முக்கிய சிவாலயங்களில் பூஜை செய்யப்படுகிறது. அதன்பின், அயோத்தி பாலராமருக்கு அணிவிக்க கிரீடம், கோவில் கமிட்டியிடம் வழங்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை