உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / முதல்வர் கோப்பைக்கான ஹாக்கி; மாநில அளவிலான போட்டிக்கு வீரர்கள் தேர்வு

முதல்வர் கோப்பைக்கான ஹாக்கி; மாநில அளவிலான போட்டிக்கு வீரர்கள் தேர்வு

உடுமலை: முதல்வர் கோப்பைக்கான, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான ஹாக்கிப்போட்டி உடுமலையில் இரண்டு நாட்கள் நடந்தது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்தில், திருப்பூர் மாவட்ட அளவிலான ஹாக்கிப்போட்டி, பள்ளி மாணவர்களுக்கும், கல்லுாரி மாணவர்களுக்கும் என இரு நாட்கள் நடந்தது.போட்டி துவக்க விழாவில், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் வரவேற்றார். நகராட்சித்தலைவர் மத்தீன், உடுமலை கோட்டாட்சியர் ஜஸ்வந்த்கண்ணன் விளையாட்டு வீரர்களை ஊக்குவித்து போட்டியை துவக்கி வைத்தனர்.மாவட்ட அளவிலான இப்போட்டியில், பள்ளி மாணவர்களுக்கான பிரிவில், 27 அணிகளும், மாணவியருக்கான பிரிவில், 11 அணிகளும் பங்கேற்றன. கல்லுாரி மாணவர்களுக்கான பிரிவில், 6 அணிகளும், மாணவியருக்கான பிரிவில், 5 அணிகளும் பங்கேற்றன.போட்டிகளை உடற்கல்வி ஆசிரியர்கள் விஜயபாண்டி, மீனாட்சிதேவி, பிரபு, தேவராஜ், சுவேதா ஒருங்கிணைத்து நடத்தினர்.

போட்டி முடிவுகள்

பள்ளி மாணவர்களுக்கான ஹாக்கி போட்டியில், உடுமலை அமராவதிநகர் சைனிக் பள்ளி அணி முதலிடத்திலும், குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மேல்நிலைப்பள்ளி அணி இரண்டாமிடமும், திருப்பூர் சென்சுரி பள்ளி அணி மூன்றாமிடத்திலும் வெற்றி பெற்றன.பள்ளி மாணவியருக்கான போட்டியில், உடுமலை லுார்து மாதா மெட்ரிக் பள்ளி அணி முதலிடத்திலும், குறிச்சிக்கோட்டை ஆர்.வி.ஜி., மேல்நிலைப்பள்ளி அணி இரண்டாமிடத்திலும், திருப்பூர் சென்சுரி பள்ளி அணி மூன்றாமிடத்திலும் வெற்றி பெற்றன.கல்லுாரி மாணவர்களுக்கான போட்டியில், திருப்பூர் சிக்கன்னா அரசு கலைக்கல்லுாரி அணி முதலிடத்திலும், உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லுாரி அணி இரண்டாமிடமும் பெற்றன.கல்லுாரி மாணவியருக்கான போட்டியில், உடுமலை விசாலாட்சி பெண்கள் கல்லுாரி 'ஏ' அணி முதலிடத்திலும், திருப்பூர் சிக்கன்னா அரசு கலைக்கல்லுாரி அணி இரண்டாமிடத்திலும், உடுமலை விசாலாட்சி பெண்கள் கல்லுாரி 'பி' அணி மூன்றாமிடத்திலும் வெற்றி பெற்றன.மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி, உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில் இரண்டு நாட்கள் நடந்தது.

கைப்பந்து போட்டி

கல்லுாரி மாணவர்களுக்கான கைப்பந்து போட்டியில், திருப்பூர் நிப்டி கல்லுாரி அணி முதலிடத்திலும், காங்கேயம் கே.ஜி.ஐ., கல்லுாரி இரண்டாமிடத்திலும் வெற்றி பெற்றன.கல்லுாரி மாணவியருக்கான போட்டியில், காங்கேயம் கே.ஜி.ஐ., கல்லுாரி முதலிடத்தில் வெற்றி பெற்றது. இரண்டாமிடத்தில் உடுமலை விசாலாட்சி பெண்கள் கல்லுாரி அணியும், மூன்றாமிடத்தில் திருப்பூர் குமரன் கல்லுாரி அணியும் வெற்றி பெற்றன.இப்போட்டிகளில், பள்ளி, கல்லுாரி என ஒவ்வொரு பிரிவிலும், சிறப்பாக விளையாடிய, தலா 18 பேர் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை