உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொழிலாளருக்கு வீடு ஏற்றுமதியாளர் வலியுறுத்தல்

தொழிலாளருக்கு வீடு ஏற்றுமதியாளர் வலியுறுத்தல்

திருப்பூர் : ''தொழிலாளர்கள் இடம் பெயர்வதை தடுக்கும் வகையில், அனைத்து வசதிகளுடன் கூடிய வீடுகளை தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என, சென்னையில் நடந்த கூட்டத்தில் ஏற்றுமதியாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.சென்னையில், 2024 - 25ம் நிதி ஆண்டுக்கான தொழில் பங்கேற்பாளர்களின் கருத்து கேட்பு கூட்டம் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் தலைமையில் நடந்தது.இதில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில், பொதுச் செயலாளர் திருக்குமரன், இணை செயலாளர் குமார் துரைசாமி ஆகியோர் பேசியதாவது:பனியன் தொழில் மேம்பட மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். வரும், பட்ஜெட்டில் தனித்தனியாகவோ அல்லது பசுமை ஆற்றல் உற்பத்திக்கான எஸ்.பி.வி.,ன் கீழ், முதலீடு செய்வதற்கு தகுந்த மானியம் வழங்க வேண்டும்.தொழிலாளர்கள் தங்களுடையை சொந்த கிராமங்களில் இருந்து தொழிற்சாலை குழுக்களுக்கு நிரந்தரமாக இடம் பெயர்வதை தடுக்கும் வகையில், அரசு ஆதரவுடன் தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய வீடுகள், தொழிலாளர் தங்கும் விடுதிகள் கட்ட அறிவிப்பு வெளியிட வேண்டும்.தொழிலாளர்களை தொழிற்சாலைகளுக்கு அழைத்து வருதற்கான போக்குவரத்து மானியம், நவீன தொழில் நுட்ப மையம், பருத்தி உற்பத்தி மையம், மாநில அரசின் மூலதன மானியத்துடன் கூடுதலாக மத்திய அரசின் மூலதன மானியத்தை பெற நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் கூறியதாவது:ஏற்றுமதியாளர்கள் சங்கத்தை பொறுத்தவரை, கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு சவால்களை சந்தித்து பயணித்து கொண்டிருக்க கூடிய திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையை எந்தவொரு சந்தர்ப்பம் கிடைத்தாலும் தவற விடாது. இதனை பயன்படுத்தி திருப்பூரில் தொழில் வளர்ச்சியை உறுதி செய்து, அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி பயணிப்பதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். எங்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக கூறினார்கள்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை